செஞ்சிக் கோட்டை

Gingee Fort

...

செஞ்சிக் கோட்டையில் காணும் பொங்கல்!

ஒவ்வொரு வருடமும் காணும் பொங்கல் அன்று மக்கள் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு தங்கள் குடும்பத்தினருடன் சென்று கண்டுகளிப்பார்கள். அந்த வகையில் இந்த வருடமும் காணும் பொங்கல் அன்று பல்வேறு சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

செஞ்சி அதன் சுற்றுப்புறங்களில் உள்ள மக்கள் காணும்பொங்கல் அன்று செஞ்சிகோட்டையில் குவிந்தனர். காலையிலிருந்தே மக்கள் கூட்டம் கூட்டமாக குவியத்தொடங்கினர். முக்கிய இடங்களான அஞ்சநேயர் கோவில், வெங்கட்ராமன் கோவில், ராஜகிரி மற்றும் கிருஷ்ணகிரி கோட்டைகளில் அதிகளவில் மக்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.

காணும் பொங்கலை முன்னிட்டு மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கியது. மேலும் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.