செஞ்சிக் கோட்டை

Gingee Fort

...

கிரகங்களின் பலன்கள்

கிரகங்களின் பலன்கள் அருணாச்சலேச்வர சிவபெருமானை வலம் வந்து வளம் காண வார நாட்கள.

திங்கட் கிழமை - சந்திரன்
திங்களன்று சந்திர கிரகம் ஆசிகளை அள்ளித் தரும் நாள். புது முயற்சிகளை துவக்க ஏற்ற நாள். முழு நிலவு நாளான பெளர்ணமியில் கிரிவலம் வருவது மிக்க பலன் தரும். அதுவே திங்கட்கிழமை பெளர்ணமி என்றால் மிகவும் மேன்மையானது.

செவ்வாய்கிழமை - அங்காரகன்
செவ்வாய் என்னும் அங்காரகன், நமது உள்ளுணர்வுகள், பேச்சு, செயல், சக்தி, உடல், வலிமை, ஊக்கம் ஆகியவற்றை ஆளுமை செய்யும் அதிபதியாகும். நமது திட்டங்கள், நீண்ட கால செயல்பாடுகள், குறிக்கோள், ஆலோசனைகள், உறவுமுறைகள் ஆகியவற்றில் அங்காரகனின் பாதிப்பு எவ்வளவு எனக் கண்டறிந்து செயல்பட இது ஒரு நல்ல வாய்பு. நமது குறிக்கோள்கள், நாம் முதலீடு செய்யும் திட்டங்களின் திறனறிந்து செயல்படுவதற்கு சிறந்த தருணம். ஆகவே செவ்வாய் அன்று கிரிவலம் வருவது, உங்கள் தனிப்பட்ட குறிக்கோள், எதிர்மறை விளைவுகள், ஆசைகள், செல்வம் மற்றும் திட்டம் பற்றி உள்ளத்தை அரித்தெடுக்கும் கேள்விகளுக்கு விடை காண ஏற்ற நாள்.

புதன்கிழமை - புதன்
புதன் நம் நல்லுறவுகளையும், சிந்தனைகளையும் ஒரு நிலைப்படுத்தும். புத்திசாதுர்யம், அறிவுக்கூர்மை, பகுத்தறிவுடன் செயல்படும் ஆற்றல் ஆகிவற்றையும் ஆளுமை செய்யும் கிரகம். நமமைச் சுற்றி நடப்பவற்றை கவனித்து அதற்கேற்ப சிந்தித்து மற்றவர்களுடன் உரையாடும் பண்புகளை ஆளுமை செய்யும் கிரகம்.
ஆகவே புதன் சிந்தனையாளர், தொடர்பாளர், புதுமுயற்சியில் துணிபவர். மாணவர் இவர்கள் கிரிவலம் வருவதற்கு நன்னாள்.

வியாழகிழமை - குரு
குருவின் ஆளுமைக்குட்பட்டவை. பயன்தரும் நிதிநிலைமை, நல்லதொரு எதிர்காலம், கற்பனை வளம், தொலைநோக்கு சிந்தனைகள், சமூக நல்லுறவுகள், குரு, தயாளமாகவும், சகஜமாகவும் நம்மை இருக்கச் செய்து நம் குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் நேசம் கொண்டுள்ளவருக்கும் உதவி செய்து நல் உறவை வளர்த்துக் கொள்ள வழி செய்பவர். நல்ல வளம் தந்து நல்ல எண்ணங்களையும் அளிப்பவர். நன்மையே தருபவர்.
வியாழனன்று கிரிவலம் வருவது எல்லோருக்குமே நன்மை தரும். முக்கியமான திருமண சுபங்கள், நல்லுறவு, நேசமனம், வளர்ச்சி, குழந்தைகள், நிதிநிலைமை, நல்லெண்ணம் முதலியவற்றுக்கு நன்னாள். நிறைந்து நிற்பதை உணரமுடியும்.

வெள்ளிக்கிழமை - சுக்கிரன்
வெள்ளிக்கிழமை காதல், கல்யாணம், கவர்ச்சி இவைகளை கட்டுப்படுத்தும் நாள். உயர்ந்த பக்திக்கு உகந்த நாள். நமது காதல், அழகு, பண்பாடு ஆகியவற்றின் திறமையை வெளிப்படுத்தும் கிரகம். வண்ணங்கள், ஒலிகள், இசை மற்றும் வகை வகையான இன்பமூட்டும் நிகழ்வுகளின் பிரதிநிதியாக இருப்பது இந்த கிரகம்.
வெள்ளிக்கிழமைகளில் கிரிவலம் வருவது ஒரு இன்பமான அனுபவம். மற்றவர்களுடன் இணைந்து அருணகிரிச்வர லிங்கத்தை வலம் வரும் போது உள்ளத்தில் அன்பும் இன்பமும் நிறைந்து நிற்பதை உணர முடியும.

சனிக்கிழமை- சனீச்சுவரன்
சனி பகவான், நம் கொள்கைகள், தனிப்பட்ட வளர்ச்சி, சமூக அந்தஸ்து ஆகியவற்றை ஆண்டு வருகிறது. நமது பொறுப்புகள், விசுவாசங்கள் உள்ளத்தின் உறுதிப்பாடு, கடமைகள் ஆகியவற்றை உணர்த்தி நம் உள்ளே பரவி நம்மை நாமே உணர்ந் கொள்ள வழி செய்கிறது.
நம் வாழ்வில் சனி பகவான் குறுக்கிடும்போது, ஒரு மாறுதலை உண்டாக்கும். செயல் முனைவோரை பணியாற்றி வளர வேண்டும் எனத் தூண்டிவிட்டு, அதைச் சவாலாக நம்மை ஏற்க வைத்து நமு முழு ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது.
சனியின் ஆற்றலால் ஏற்படும் இந்த சவால்களையும் சோதனைகளையும் எதிர் நோக்காமல் இடையூறுகளை கண்டு துவண்டு விட்டால் பயத்தில் வயப்பட்டு வருந்த நேரிடும்.
வாரத்தின் ஆறாவது நாளான ஆறாவது கிரகத்தின் கிழமையான சனிக்கிழமைகளில் கிரிவலம் வருவதால் பல விரும்பத்தக்க அம்சங்கள் நமக்கு கிட்டும். தெய்வீக விதிகளை மாற்றியமைத்திட இயலாது. ஆயினும் அவற்றை சிறிதேனும் புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. அருணாச்சலேச்சவரலிங்க கிரிவலம் நிச்சமாக தெளிவு பெற்று நம்மை புரிந்து கொள்ள வழி செய்யும். நாம் பணிவுடன் சோதனைகளையும் வேதனைகளையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அடைந்துவிட்டால் சனிபகவான் அதற்கான 'முதலும்' அவனே 'முடிவும்' அவனே என்பதை உணர்த்திடுவான்.

ஞாயிற்றுக்கிழமை - சூரியன்
மகிழ்ச்சியும், ஆனந்தமும் அளித்து நம் தீர்மானங்களை வெளிப்படுத்த ஒளியூட்டும் வழிகாட்டியாக விளங்குவது சூரியன். தொடர்ந்து ஒளிபரப்பி, சூரிய மண்டலம் மற்றும் உள்ள கிரகங்களின் படைப்பாற்றலையும், இயக்கங்களையும் நிலைக்கச் செய்கிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில் கிரிவலம் வருவது, நம் உள்ள ஒளியை ஒன்று திரட்ட உதவுகிறது. சிவனின் தெய்வீக வட்டங்களை வலம் வருவது மகிழ்வூட்டும் நாளாக அமைகிறது.<